தொடைப்பகுதி சதையை குறைக்க 3 அற்புத வழிகள்

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasri.com

இடுப்பு, வயிறு போன்ற பகுதிக்கு அடுத்தப்படியாக தொடைப் பகுதியில் தான் அதிகப்படியான சதைகள் காணப்படும். அத்தகைய தொடைப் பகுதியை ஃபிட்டாக வைத்திருக்க சில உடற்பயிற்சிகளை பின்பற்றி வந்தாலே போதும்.

ஸ்டாண்டிங் சைடு லெக் ரைஸ் (Standing side leg raise)

இடது கையை அருகில் உள்ள சுவர் அல்லது நாற்காலியில் பிடித்தபடி நின்று கொண்டு இடது கை உடலை ஒட்டியபடி இருக்க வேண்டும்.

பின் வலது காலை பக்கவாட்டில் முடிந்த வரை உயர்த்தி ஒருசில விநாடிகள் கழித்து பழைய நிலைக்குத் திரும்பி, கையை மாற்றி இடது காலுக்கும் அதேபோன்ற பயிற்சியை செய்ய வேண்டும்.

ஃபிளாட் லெக் சைடு ரைஸ் (Flat leg side raise)

விரிப்பில் பக்கவாட்டில் தலையை இடது கையால் தாங்கியபடி தரையில் படுத்து கொண்டு வலது கையை மடித்துக் கைவிரல்கள் தலையைப் பார்த்தபடி தரையில் பதிக்க வேண்டும்.

அதன் பின் இடது காலை மட்டும் முடிந்த வரை மேலே உயர்த்தி, இறக்க வேண்டும். இதேபோன்று வலது காலுக்கு செய்ய வேண்டும்.

உள் தொடை (Inner Thighs)

இப்பயிற்சியை செய்யும் போது இடது கையால் தலையைத் தாங்கியபடி ஒருக்களித்து தரையில் படுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு வலது கையை மடித்து முன் பக்கமாக விரல்கள் தலையைப் பார்த்தபடி வைத்து, வலது காலை மடித்து இடுப்புப் பகுதிக்கு அருகில் வைத்து இடது காலை மேலே உயர்த்திச் சில விநாடிகள் கழித்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்