இடுப்பு பகுதி சதைகளை இறுக்கமாக்கும் எளிய வழி: இவர்கள் பின்பற்ற வேண்டாம்

Report Print Printha in உடற்பயிற்சி
128Shares
128Shares
lankasrimarket.com

தினமும் காலையில் எழுந்ததும் அர்தபவன் முக்தாசனாவை செய்து வந்தால் பல்வேறு ஆரோக்கிய பலன்களை பெறலாம்.

ஆனால் இந்த பயிற்சியை முதுகு மற்றும் வயிறு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டும் செய்யக் கூடாது. வேண்டுமானால், அவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் செய்யலாம்.

அர்தபவன் முக்தாசனா செய்வது எப்படி?

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு இடது காலை மடக்கி தொடைப்பகுதியை மார்புக்கு அருகே கொண்டு வந்து, இருகைகளினால் மடக்கிய இடது காலைப் பிடித்தவாறு இருக்க வேண்டும்.

அடுத்து, தலையை முன்னோக்கி நகர்த்தித் தாடைப்பகுதியால், மடக்கி இருக்கும் முழங்கால் முட்டியைத் தொட்டவாறு சில விநாடிகள் வரை இருந்து விட்டு இதேபோல் வலதுகாலுக்கும் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
  • தசைகள் மற்றும் உறுப்புகள் சுறுசுறுப்பாகும்.
  • செரிமானம் சீராக நடைபெறும்.
  • இடுப்பு மற்றும் கால் பகுதியின் சதைகள் வலிமையாகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்