ஆயுளை அதிகரிக்க அட்லீஸ்ட் இதையாவது செய்யுங்கள்

Report Print Givitharan Givitharan in உடற்பயிற்சி
87Shares
87Shares
lankasrimarket.com

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மாத்திரமே பல நோய்களை தவிர்த்து ஆயுளை அதிகரிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அனேகமானவர்கள் சோம்பல் தன்மை காரணமாக உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை.

எனினும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியையேனும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக பின்பற்றி வரும்போது உடலில் எடை குறைவதை அவதானிக்க முடியும்.

அவ்வாறே கொலஸ்திரோலின் அளவிலும் மாறுபாடு ஏற்படும்.

இதனால் இதயம் தொடர்பான நோய்கள், இரத்தக் குழாய் அடைப்புக்கள் என்பன தவிர்க்கப்படும்.

மேலும் இன்சுலின் அளவு கட்டுப்படுத்தப்பட்ட உடல் எடை அதிகரித்தலும் தவிர்க்கப்படுகின்றது.

இது தொடர்பான ஆராய்ச்சி ஒன்றினை சுண்டெலியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவ் ஆராய்ச்சி வெற்றியளித்ததன் பட்சத்திலேயே ஏதாவது ஒரு உடற்பயிற்சியையேனும் தொடர்ச்சியாக செய்துவரும்போது ஆயுள் அதிரிக்கும் என அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்