இடுப்பு சதையை குறைக்க: இப்படி ஒரு எளிய வழி உள்ளதா?

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com

கொழுப்புகள் இடுப்பு பகுதியில் அதிகமாக சேர்வதால் இடுப்புப் பகுதியில் சதைகள் அதிகமாக காணப்படும்.

எனவே இந்த இடுப்பு சதையை குறைக்க வீட்டிலேயே ஸ்டிக் பயிற்சியை செய்து வருவதன் மூலம் விரைவில் இடுப்பு பகுதியை மெல்லிய அழகான தோற்றத்தில் மாற்ற முடியும்.

ஸ்டிக் பயிற்சியை எப்படி செய்ய வேண்டும்?

முதலில் நேராக நின்று கொண்டு குச்சியை தோள்களில் வைத்து இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின் வலது காலை முன்புறமாக எடுத்து வைத்து, குச்சியை தோள்பட்டை மேடைகளில் வைத்து அழுத்த வேண்டும்.

அதன் பின் அப்படியே மெதுவாக இடதுகாலை பின்புறமும், வலது காலை முன்புறமும் கொண்டு வந்து உடலை மட்டும் வலதுப் பக்கமாக திருப்ப வேண்டும்.

இப்போது இடதுகாலை முன்புறமாகவும், வலது காலை பின்பக்கமாகவும் வைத்துக் கொண்டு உடலை மட்டும் இடதுப் பக்கமாக திருப்ப வேண்டும்.

அதன் பின் கால்கள் இரண்டையும் அகலமாக வைத்துக் கொண்டு, குச்சியை பிடித்தவாறே வலதுபுறமாக பக்கவாட்டில் நன்றாக சாய்ந்து நிற்க வேண்டும்.

மேலே கூறிய வழிமுறைகளின் படி, இந்த ஸ்டிக் பயிற்சியை இடது புறமாகவும் சாய்ந்து செய்ய வேண்டும்.

பலன்கள்
  • கழுத்து, தோள் நரம்பு, தசைகள் வலிமையாகி, கூன் இல்லாத நிமிர்ந்த தோற்றத்தை பெறலாம்.
  • பக்கவாட்டில் நன்றாக வளைந்து பயிற்சியைச் செய்தால், வயிறு மற்றும் அடிவயிற்றுத் தசைகள் வலிமை அடையும்.
  • வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வயிறு அழகான V வடிவத்தைப் பெறும்.
  • இடுப்பில் உள்ள அதிகப்படியான தசைகள் குறைந்து, இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்