கொழுப்பை குறைக்கும்..முதுமையை தடுக்கும்- அற்புத பானம்

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

கோடைகாலத்தில் அனைவருக்கும் உகந்த வெள்ளரிக்காயில் விட்டமின் C, K, பீட்டா கரோடின், பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடென்ட் போன்ற முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே வெள்ளரிக்காயுடன் மற்ற காய்கள் மற்றும் பழங்களையும் சேர்த்து நீர் வடிவில் குடித்து வந்தால், நமது உடம்பின் செல்சிதைவை தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வெள்ளரி எலுமிச்சை நீர்

வெள்ளரிக்காய், எலுமிச்சை, புதினா இலை, தேவையான அளவு உப்பு மற்றும் அதிக நீர் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் செய்து, ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் குடிக்க வேண்டும்.

இதனால் நமது உடம்பில் உள்ள கொழுப்பைக் குறைத்து, கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அதிகப்படியான சூட்டை தணிக்கிறது.

வெள்ளரி திராட்சை நீர்

வெள்ளரி, பச்சை திராட்சை, எலுமிச்சை அகிய அனைத்தையும் தேவையான அளவு எடுத்து அதில் அதிக தண்ணீர் சேர்த்து ஜூஸ் செய்து, ப்ரிட்ஜில் வைத்து, சில மணி நேரம் கழித்து, அதில் மிளகுத்தூளை தூவி குடிக்க வேண்டும்.

இதனால் நமது சருமத்தை பாதுகாத்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, இன்சுலின் சுரப்பை சரி செய்து, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது.

வெள்ளரி இளநீர்

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கி, சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடி ஆகிய இரண்டு கலவையையும் அரைத்து, அதனுடன் இளநீரை ஊற்றி, அரை மணி நேரம் கழித்துக் குடிக்க வேண்டும்.

இதனால் நமது உடம்பிற்கு, அதிகமான நீர்ச்சத்துக்கள் கிடைத்து, புற்றுநோய் மற்றும் முதுமை நிலமைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments