முதுமைக்கு குட்பை சொல்லணுமா? இதையெல்லாம் தவறாம சேர்த்துக்கோங்க

Report Print Arbin Arbin in உணவு
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

நாம் இளமையாக இருப்பதற்கும் சாப்பிடும் உணவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சில வகை காய்கள் உங்கள் முகத்திற்கு முதிர்ச்சி அளிக்காமல் இளமையாக வைத்திருக்கும். காரணம் செல்களை புத்துப்பித்தல்.

செல் சிதைவை தடுத்தாலே நம் இளமையை நீடிக்கச் செய்யலாம். செல்களின் ஆரோக்கியமான வளர்ச்சி மரபணுவில் பிரதிபலிக்கும். ஆகவே நம்மை இளமையாக வைத்திருக்க முடியும்.

advertisement

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்களான பூசணி, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருக்கின்றன.

சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் போன்றவை கொழுப்பு குறைந்த உணவுகள். கால்சியம் அதிகம் உள்ளவை, அதோடு புற்று நோயை எதிர்த்து போராடுபவை. மரபணு மாற்றப்படாத சோயா உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட்டு பாருங்கள்.

லைகோபைன் மற்றும் கரோடினாய்டு போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளது. இவை புற்று நோயை எதிர்க்கும் திறன் கொண்டவை. இதில் கௌமாரி மற்றும் கோல்ரோஜெனிக் அமிலம் அதிகம் இருப்பதால் அவை புற்று நோயை எதிர்க்கிறது.

பசலைக் கீரை, வெந்தயக் கீரை , லெட்யூஸ், பார்ஸ்லி, செலரி போன்றவற்றில் உள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், விற்றமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டைக்கோஸ் பல வகை பிரிவுகளை கொண்டுள்ளது. அவற்றில் சில, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ராக் கோலி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் இந்த காய்கறிகளில் பீட்டா கரோட்டின் மற்றும் புற்றுநோயை தடுக்கின்றது.

மிளகாய் வயிற்றை சேதப்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது நிபுணர்கள் மிளகாயில் இருக்கும் லேசான எரிச்சல் வயிற்றின் பாதுகாப்பிற்கு உதவும் என்று கூறுகின்றனர். இந்த காரம் புண் மற்றும் செல் பாதிப்பை தடுக்க உதவும். மேலும் இவற்றில் விற்றமின் `சி' மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆக்சிஜனேற்றம் உள்ளன. அதிலும் குடைமிளகாயின் உள் இருக்கும் ஒரு வித காரம் தரும் பொருளில் ஆக்ஸிஜனேற்றம் தரும் தன்மை உள்ளது என்பதால் இது உடலுக்கு மிகவும் நல்லது.

க்ரீன் தேநீரில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உள்ளது. மேலும் அன்டிக்ஸிடன்ட்டுகளான பாலிஃபீனால்கள் புற்றுநோயை தீர்க்கிறது என்று கூறப்படுகின்றது. இது இதயத்திற்கும், கல்லீரலுக்கும் மிகவும் நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments