தினம் ஒரு மாதுளை சாப்பிடுங்கள்: அற்புதம் உங்களுக்கே தெரியும்

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

மாதுளை பழத்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி- ஆக்ஸிடென்ட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் B, C போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்களை கொண்ட மாதுளம் பழத்தை தினசரி ஒன்று சாப்பிட்டு வருவதன் மூலம் நிறைய அற்புத நன்மைகளை பெறலாம்.

மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • மாதுளம் பழம் சாப்பிடுவதால், ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகளை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தம் சுத்தமாக்க உதவுகிறது.
  • வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சரி செய்து, உடம்பில் ஏற்படும் வீக்கம், கை, கால்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியமாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்கும். நெஞ்சுவலி ஏற்படும் போது மாதுளம் பழம் சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
  • மாதுளையில் உள்ள மொட்டை தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால், கண்வலி, கண்ணில் நீர் வடிதல், கண் சிவப்பாக மாறுதல், போன்ற கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
  • மாதுளம் பழச்சாற்றை சிறிது நேரம் வெயிலில் வைத்து சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் பெருகும். பற்கள் மற்றும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
  • மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
  • கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச்சாறு ஆகிய அனைத்திலும் ஒரு டம்ளர் அளவு எடுத்து நன்றாக கலந்து உருட்டும் பாகு பதத்தில் காய்ச்சி, அதில் தினமும் நெல்லிக்காய் அளவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், படை, தேமல் போன்ற சரும நோய்கள் வராது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments