சர்க்கரைவள்ளிக் கிழங்கு: உடல் எடையை குறைக்குமா? அதிகரிக்குமா?

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasri.com

இனிப்புச் சுவை மிகுந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள சத்துக்கள்?

100 கிராம் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் 70-90 சதவீதம் கலோரி ஆற்றல், குறைந்த அளவிலான கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு எடையை அதிகரிக்குமா?

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பைபர், நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது வயிறு நிரம்புவது போன்ற உணர்வு, செரிமானப் பிரச்சனை ஆகியவற்றை தடுத்து, உடலில் கொழுப்புசத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பையும் தடுக்கிறது. அதனால் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்?
  • ரத்த அழுத்தத்தை சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது.
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கின் இலை விஷக்கடிக்கு மருந்தாகிறது. எனவே இதன் இலையை பச்சையாக அரைத்து, அதை தேள், பூச்சி கடிவாயில் வைத்து கட்டுவதால் விஷம் முறிந்து வலி, வீக்கம் குறையும்.
  • தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு பிரச்சனைக்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து, அதனோடு 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பேஸ்ட் செய்து அதை அரிப்பு உள்ள இடத்தில் தடவ குணமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்