எடையை வேகமாக குறைக்க.. எவ்வளவு கலோரி எரிக்க வேண்டும்?

Report Print Printha in உணவு
557Shares
557Shares
lankasrimarket.com

நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகள் மற்றும் உடல் எடை ஆகிய இரண்டிற்கும் ஒன்றோடொன்று தொடர்பு உள்ளது.

உடல் எடை அதிகரிப்பதற்கு கலோரியை தவிர வேறு காரணங்களும் உள்ளது. குறைவான கலோரிகளை எடுத்தாலும் கூட, அது உடல் எடையை குறைக்காமல் அதிகரித்து, நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

எனவே அன்றாட உணவில் சராசரியான கலோரிகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கலோரி என்றால் என்ன?

கலோரி என்பது உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல். இந்த ஆற்றலை கொண்டு உடல் உறுப்புகளின் சக்தி மற்றும் அதன் செயல்பாடுகள் அதிகரிக்கும்.

கலோரிககள் உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

தினசரி போதுமான கலோரிகளை நாம் எடுக்கவில்லை எனில், மிகுந்த சோர்வு, தலைவலி, உடல் உபாதைகள் ஏற்படும்.

அதுவே அதிகமான கலோரி உணவுகள் அல்லது குறைந்த அளவு கலோரி உணவுகளை எடுக்கும் போது, ஆற்றல் செலவழியாமல் உடலில் கொழுப்பாக மாறி கொழுப்பு செல்களில் தங்கி உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

கலோரிகள் VS உடல் எடை

தினசரி நம் செயல்களை செய்வதற்கான கலோரிகள் நமக்கு மிகவும் தேவை. ஒரு நாளைக்கான கலோரியின் அளவானது ஒருவரின் வயது, பாலினம் மற்றும் உடற் செயல்கள் போன்றவற்றை பொருத்தது.

19-30 வயதுடைய ஒரு ஆண் ஒரு நாளைக்கு சுறுசுறுப்பாக அனைத்து செயல்களையும் செய்ய 2600-2800 கலோரிகள் தேவைப்படுகின்றது.

19-30 வயதுடைய ஒரு சுறுசுறுப்பான பெண்ணிக்கு ஒரு நாளைக்கு 2000 - 2200 கலோரிகள் தேவைப்படுகின்றது.

எடை குறைய எவ்வளவு கலோரிகளை குறைக்க வேண்டும்?

நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், மேலே குறிப்பிட்டுள்ள ஒரு நாளைக்கு தேவையான உங்கள் கலோரிகளிலிருந்து 500 கலோரிகளை கழித்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, உடல் எடையை குறைக்க விரும்பும் ஒரு ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்