இறைச்சி உணவில் எது ஆபத்தானது?

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

நாம் சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும் அது நீர்த்த தன்மையில் உண்பதே நம் உடல்நலனுக்கு மிகவும் உகந்தது.

அந்த வகையில் இறைச்சி போன்ற கடினத்தன்மை வாய்ந்த உணவை கூட எளிதில் ஜீரணம் அடையுமாறு சமைக்கலாம்.

இறைச்சியை எப்படி சமைத்தால் நல்லது?

இறைச்சி சமைக்கும் குழம்பிற்கு சேர்க்கும் மசாலாவில் மிளகாய், மல்லி, இஞ்சி, பூண்டு, சிறிது கறி மசாலாக்கள் மற்றும் மசாலாவின் காரத்தன்மையை குறைக்க சிறிதளவு தேங்காய், கசகசா ஆகியவற்றைச் சீரான அளவில் சேர்த்து அம்மியில் துவையலைப் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சியின் கவிச்சி வாடையை போக்குவதற்கும், சுவையை அதிகரிப்பதற்கும் சேர்க்கப்படும் மசாலாவை அரைக்கும் போது, சூடேறாத அளவுக்கு ஒன்றுக்குப் பலமுறை நிறுத்தி நிறுத்தி அரைக்க வேண்டும்.

இவ்வாறு சமைத்தால் கடினமாக இருக்கும் இறைச்சி, சாப்பிட்டவுடன் மிக எளிதில் செரிமானம் அடைந்துவிடும். அதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

இறைச்சியில் ஆபத்தை ஏற்படுத்துவது எது?

இறைச்சி சமைக்கும் போது கடைகளில் விற்கும் பாக்கெட் மசாலாக்களை பயன்படுத்தவே கூடாது.

ஏனெனில் அவைகள் அதிக வெப்பத்தில் அரைக்கப்பட்டு விரைவில் கெட்டுவிடும் தன்மையுடன் இருக்கும். அதோடு மசாலாக்களில் வண்டு பிடிக்காமல் இருக்க ரசாயனம் மற்றும் செயற்கை நிறமிகளை சேர்க்கப்பட்டிருக்கும்.

அதனால் இந்த மசாலாக்களை கடிமான இறைச்சிகளுடன் சேர்த்தால், அவை செரிமானம் அடைவதற்கு பல மணி நேரத்தை எடுத்துக் கொள்வதுடன், பல உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

அதேபோல உணவகங்களில் இறைச்சி வாங்கி உண்பதையும் முற்றிலும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்