ரத்தத்தை சுத்தமாக்க இதை அடிக்கடி சாப்பிட்டாலே போதும்

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

ரத்தத்தில் நச்சுக்கள் அதிகரித்து விட்டால் அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலைவலி, மிகுந்த சோர்வு மற்றும் சரும பாதிப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக் கூடும்.

அதனால் ரத்தத்தை சுத்தமாக்கும் உணவுகளை அன்றாடம் நாம் எடுத்துக் கொண்டால் நல்ல பலனை பெறலாம்.

ரத்தத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டியவை?

  • பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வர நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமடையும்.

  • இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகி வர ரத்தம் சுத்தமாகும்.

  • தர்ப்பைப் புல் கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

  • தொடர்ந்து 40 நாட்கள் அத்திப் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்து அடைந்து, உடலின் பலன் அதிகரிக்கும்.

  • செம்பருத்தி பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கி விட்டு அதன் இதழ்களை மட்டும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

  • இறைச்சி, வெந்தயம் அஸ்பாரகஸ், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.

  • கீரைகள், தேன், சுண்டைக்காய், முழு தானியங்கள், கிவி பழம், கேரட், வெல்லம், முட்டை, ஈரல் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்