இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்: ஆஸ்துமா வருமாம்

Report Print Printha in உணவு
175Shares
175Shares
lankasrimarket.com

பதப்படுத்தும் கெமிக்கல்களான சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், பொட்டாசியம் மெட்டா-பை-சல்பைட், சோடியம் மெட்டா-பை-சல்பைட் போன்றவை நிறைந்த உணவுகள் அனைத்துமே ஆஸ்துமா நோயை வரவழைக்கக் கூடியது.

எனவே ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுகளில் இருந்து விலகி இருந்தால் ஆஸ்துமா நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை கடைகளில் வாங்கி குடிக்கக் கூடாது, ஏனெனில் கடையில் செயற்கையான எலுமிச்சை ப்ளேவர்கள் நிறைந்த பானங்களில் ரசாயனம் சேர்க்கப்பட்டிருக்கும், அதனால் அவை ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.

உலர் பழங்கள்

சில நேரங்களில் உலர் பழங்கள் கூட ஆஸ்துமா பிரச்சனையை தீவிரமாக்கும், அதிலும் குறிப்பாக உலர் ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர் செர்ரி மற்றும் இதர உலர்ந்த பழங்கள் அல்லது காய்கறிகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

இறால்

உறைய வைக்கப்பட்ட இறால்களில் சல்பைட்டுகள் இருக்கும், எனவே அத்தகைய இறால்களை தவிர்ப்பது மிகவும் நல்லது, ஆனால் பிரஷ்ஷாக உள்ள இறால்களை சாப்பிடலாம்.

ஊறுகாய்

பாட்டில்களில் போட்டு விற்கப்படும் ஊறுகாயில் சல்பைட்டுகள் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும், எனவே இவற்றை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்த்து விடுவது நல்லது.

உருளைக்கிழங்கு

பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கு, உறைய வைக்கப்பட்ட உணவுகள், பிரெஞ்சு ப்ரைஸ் மற்றும் இதர பாக்கெட் உணவுகளில் சல்பைட்டுகள் இருக்கும், எனவே அவற்றை சாப்பிடக் கூடாது.

ஒயின் மற்றும் பீர்

ஒயின் மற்றும் பீரில் சல்பைட் உள்ளது, எனவே அவற்றை குடித்த பின் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படும், எனவே அவற்றை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது.

இதர உணவுகள்

தக்காளி, சோயா பொருட்கள், சால்மன் மீன், மாப்பிள் சிரப், லெட்யூஸ், பூண்டு, முட்டை, சோள மாவு, அஸ்பாரகஸ் போன்றவற்றிலும் சல்பைட்டுகள் அதிகம் உள்ளது. எனவே அத்தகைய உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்