இந்த உணவுப் பொருட்களை தவறி கூட பிரிட்ஜில் வைத்து விடாதீர்கள்

Report Print Printha in உணவு
1758Shares
1758Shares
lankasrimarket.com

உணவுப் பொருட்களில் எது மீந்து போனாலும் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பார்கள். ஆனால் அப்படி வைக்கும் உணவுப் பொருட்களில் சிலவற்றை மட்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

தக்காளி

தக்காளி பழத்தை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்தவேக் கூடாது. ஏனெனில் அது தக்காளியில் உள்ள சத்துக்களை ஆவி ஆக்கி அதன் சுவையையும், மணத்தையும் குறைத்து விடும்.

பூண்டு

பூண்டில் சிறிது ஈரப்பதம் இருந்தாலே அது முளைவிட ஆரம்பித்து விடும். அது மட்டுமின்றி பூண்டை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் அதனுடைய சுவையை இழப்பதுடன், ஃபிரிட்ஜில் இருக்கும் அனைத்து பொருட்களில் இருந்தும் பூண்டு வாசனை வரும்.

ஜாம்

ஜாமை ஃபிரிட்ஜில் வைப்பது அதனுள் கிருமி வளர வழி செய்யும். ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்க பதப்படுத்த தேவையான பல பொருட்கள் ஜாமில் சேர்க்கப்பட்டுள்ளது தான் அதற்கு காரணமாகும்.

அதுவும் குறிப்பாக இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அந்த ஜாம் பாட்டிலுனுள் இருக்கும் சிறிது வெப்ப காற்று பாக்டீரியா போன்ற கிருமிகள் வளர்வதற்கான தகுந்த சூழலை ஏற்படுத்திவிடும்.

ரொட்டி

பிரெட் மறும் ரொட்டியை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஏனெனில் குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஈரப்பதம் ரொட்டியை சீக்கிரமாக கெட்டு போக செய்துவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை குளிர்ச்சியான இடத்தில் தான் வைக்க வேண்டும் என்றாலும் அதே சமயம் அந்த இடம் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். ஃபிரிட்ஜில் உருளைக்கிழங்கை வைப்பதால் அது அதன் சர்க்கரை அளவை அதிகரித்து புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.

காபித்தூள்

காபித்தூள் ஃபிரிட்ஜில் இருக்கும் அனைத்து நாற்றங்களை உறிந்து விடும். அதனால் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசினால் அதை சரிசெய்ய காபிதூளை உள்ளே வைக்கலாம். ஆனால் பயன்படுத்தும் காபித்தூளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

வெங்காயம்

குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தில் உள்ள ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றி அதை மென்மையாக மாற்றி முளைவிடவும் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் திறந்தால் வெங்காய நாற்றம் ஏற்படும்.

தேன்

தேனை ஃபிரிட்ஜில் வைத்தால் அது இறுகிப் போக நேரிடும். அதனால் அது பார்ப்பதற்கு பளிங்குக் கல்லை போல் ஆகிவிடும்.

ஆப்பிள்

ஃபிரிட்ஜில் ஆப்பிள் பழத்தை வைத்தால் அதுனுடைய சத்துக்களை இழந்து விடும். மேலும் அதன் தோல் வறண்டு மெல்வதற்கு கடினமாக மாற்றிவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்