இந்த மீனை மட்டும் பச்சையாகவே சாப்பிட வேண்டும்: ஜப்பானியர்களின் உணவுமுறை

Report Print Kabilan in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

உணவுப் பழக்கத்தில் ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் முறை மிகவும் வித்தியாசமானது. அவர்கள் ‘ஷாஷிமி’ என்னும் ஒரு வகை மீன் உணவை மட்டும் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள்.

ஜப்பானியர்கள் பொதுவாக காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், மீன், முட்டை, கடற்பாசி, சோயா, அரிசி, கிரீன் டீ ஆகியவற்றையே தங்களின் விருப்பமான உணவுப் பட்டியலாக வைத்துள்ளனர்.

ஆனால், இறைச்சி மற்றும் பாலை அவர்கள் குறைந்த அளவே உட்கொள்கின்றனர். சிலவகை உணவுகளை தீயினால் வாட்டியும், சில வகை உணவுகளை வேக வைத்தும் சாப்பிடும் ஜப்பானியர்கள்,

‘ஷாஷிமி’ என்னும் மீனைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகை உணவை மட்டும் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். ஃபுகு எனும் ஒரு வகை ஷாஷிமி உணவு, பஃப்பர் மீனிலிருந்து செய்யப்படுகிறது.

இந்த மீனின் உடலில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் விஷம், நமது உடலின் தசைகளை மரத்துப் போக வைக்குமாம். மேலும், இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்குமாம்.

எனினும், ஷாஷிமியை முறையாக தயாரித்து உண்பதில் பிரச்சனை இல்லை என்கின்றனர் ஜப்பானியர்கள். ’ஷாஷிமி’ என்பது நறுக்கப்பட்ட, சமைக்காத, குளிர்விக்கப்பட்ட இறைச்சி அல்லது மீன்.

ஷாஷிமி என்பதற்கு துளையிடப்பட்ட இறைச்சி என்று அர்த்தமாம். ஷாஷிமி செய்யப்படும் மீன்கள் தூண்டில்களில் பிடிக்கப்பட்டவுடன், அவை உயிருடன் இருக்கும்போதே ஒரு உலோக கம்பியினால் குத்தி வைக்கப்படுகின்றன.

பின்னர், சூரை, சால்மன், சங்கரா, கணவாய், கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் ஷாஷிமிக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மாட்டிறைச்சியும், கோழி இறைச்சியும் கூட இதில் பயன்படுத்தப்படும்.

ஷாஷிமி உணவினை உண்ண முக்கியமாக சுவைச்சாறும், காரமானச் சாறும் இருக்க வேண்டும். மற்றும் ஷாஷிமி சோயா சாற்றிலும் கலந்து பரிமாறப்படும்.

கரிப்பு சுவைக்காக சுவைச்சாற்றை தெளித்துக் கொள்வர். சிலவேளைகளில் காரச்சுவையான ‘வசாபி’-ஐ பயன்படுத்துவர். ஷாஷிமி ஆரோக்கியமானது என்றாலும், வசாபியுடன் சேர்த்து சாப்பிடும்போது பாக்டீரியா தொடர்பான சிக்கல்கள் சரி செய்யப்படும்.

மேலும், வேக வைத்து உணவுகளை உண்ணும் பழக்கமுடையவர்களுக்கு, ஷாஷிமி ஒவ்வாமையை ஏற்படுத்துமாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்