இனிமேல் இந்த 4 உணவுப் பொருட்களையும் நீரில் கழுவாமல் பயன்படுத்துங்கள்

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

காய்கறி போன்ற உணவுப் பொருட்களை சமைக்கும் போது கழுவி சமைப்பதே நல்லது. ஆனால் சில காய்கறி வகைகளை மட்டும் கழுவாமல் சமைப்பது தான் ஆரோக்கியம். அப்படிப்பட்ட உணவுப் பொருட்கள் எவையென்று தெரியுமா?

முட்டை

கடைகளில் இருந்து வாங்கப்படும் அனைத்து முட்டைகளின் மேற்பரப்பில் பாக்டீரியா கிருமிகளில் இருந்து பாதுகாக்க, நம் உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தாத ரசாயனம் ஒன்று தடவப்படுகிறது.

அதனால் முட்டைகளை தண்ணீர் கழுவாமல் சமைக்க வேண்டும். இல்லையெனில் முட்டையில் பாக்டீரியா வளர்வதோடு, சமைக்கும் மற்ற உணவுப் பொருட்களிலும் பரவும் அபாயத்தை உண்டாக்கும்.

காளான்

காளான் நீரை மிக விரைவில் உறியும் தன்மைக் கொண்டது. அதனால் காளானை கழுவும் போது அது வேகமாக தண்ணீரை தன்னுள் இழுத்து அதில் இருக்கும் விட்டமின் சத்துக்கள் அனைத்துமே இழந்துவிடும்.

எனவே காளான்களை தண்ணீரில் கழுவாமல் சமைப்பதே மிகவும் சிறந்தது.

பாஸ்தா

பாஸ்தா ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் மேற்பரப்பில் ஸ்டார்ச் போன்ற மாவுப் பொருட்களை சேர்க்கின்றனர். அதனால் பாஸ்தாவை தண்ணீரில் கழுவி சமைக்கக் கூடாது. இல்லையெனில் பாஸ்தாவின் சுவைகள் குறைந்துவிடும்.

இறைச்சி

இறைச்சியை சமைக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாக்களை நீரில் நன்கு கழுவுவார்கள். ஆனால் அந்த முறை மிகவும் தவறானது. ஏன்னெஇல் அதனால் கறியில் உள்ள பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்.

அதற்கு பதிலாக கரியை குறைந்த சூட்டில் தண்ணீரில் வேகவைத்து சமைத்து சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்