இந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டாம்

Report Print Thuyavan in உணவு
452Shares
452Shares
lankasrimarket.com

காலையில் ராஜா போல், மதியத்தில் இளவரசன் போல், இரவில் ஏழை போல் உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.

அப்படியென்ன சிறப்பு இருக்கு காலை உணவில்?

காலை உணவு தான் நம் உடம்பை சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும். அவசரம் காரணமாக ஜங்க் உணவுகளையே நாம் பெரிதும் விரும்பி எடுத்துக்கொள்கிறோம்.

இதனால் நம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலை வருத்தும் பல நோய்கள் உண்டாகிறது.

காலையில் பிரட் மற்றும் ஜாம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது அல்லதென்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதற்க்கு பதிலாக பிரட் உடன் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது சிறந்தது அல்லது வேகவைத்த முட்டையுடன், ஒரு டம்பளர் பால் சேர்த்து கொண்டால் நலம்.

வெளிநாட்டு உணவு வகையான டோனட்டை தவிர்ப்பது நல்லது. இதில் பாஸ்ட்ரிஸ் உடன் சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரையால் செய்யப்பட்ட கலவை இருப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

மேலும் செயற்கை சுவையூட்டிகளால் பயன்படுத்தப்படும் பர்கர் போன்ற உணவு வகைகளையும் காலையில் தவிர்ப்பது உடலுக்கு நலமாகும்.

டப்பாவில் அடைத்து விற்கப்படும் ஜூஸ்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரித்து சர்க்கரை நோய் எளிதில் உடம்பை தாக்கச்செய்யும், ஆகையால் இதை தவிர்ப்பது நன்று.

குறிப்பாக இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது சிறந்த வழியாகும், கடைகளில் விற்கப்படும் சில செரில் பொருட்கள் தானியங்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், இவற்றில் க்ளுட்டனும், சர்க்கரையும் அதிகளவில் இருக்கும்.

எனவே இது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற உணவல்ல என்பதைப் புரிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவை உட்கொண்டு வாருங்கள்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்