இதெல்லாம் அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரை நோயே வராது

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

குரோமியம் சத்துக்கள் நம் உடலின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது இன்சுலின் சுரப்பில் சீராக்கி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

அதற்கு தினசை குரோமியம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை தவறாம் சாப்பிட்டு வர வேண்டும். அப்படிப்பட்ட குரோமியம் அடங்கிய உணவுகள் இவைகள் தான்,

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் அதிக அளவில் குரோமியம் அடங்கியுள்ளது. இதில் விட்டமின் A, C, B6, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவைகள் உள்ளது. எனவே இக்காயை வேகவைத்து அல்லது வதக்கி சாலட்டாக சாப்பிடலாம்.

மக்காச்சோளம்

மக்காச்சோளத்தில் இரும்புச் சத்து, விட்டமின் B6 மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இந்த மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குரோமியம், விட்டமின் A, C, மாங்கனீஸ் மற்றும் பிற விட்டமின்கள், தாதுக்கள் போன்றவைகள் ஏராளமாக உள்ளது. எனவே இக்கிழங்கை தினசரி சாப்பிடுவது மிகவும் நல்லது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் குரோமியம், ஜிங்க், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. எனவே இந்த இறைச்சி சுவைமிகுந்த உணவு மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

முட்டை

முட்டையிலும் கூட அதிகமான குரோமியம் உள்ளது. ஒரு முட்டையில் 26 மைக்ரோகிராம் அளவிற்கு குரோமியம் காணப்படுகிறது. எனவே முட்டையை தினமும் ஒன்று சாப்பிட்டாலே போதும்.

தக்காளி

ஒரு கப் தக்காளியில் 1.26 மைக்ரோகிராம் குரோமியம் அடங்கியுள்ளது. எனவே தக்காளி பழத்தை சாலட் மற்றும் சூப்புடன் தக்காளி சேர்த்து சாப்பிடலாம் அல்லது தினமும் இரவு உணவோடு தக்காளி சூப் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்