வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கான உணவு

Report Print Fathima Fathima in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

இன்றைய அவசர உலகில் தேவையான அளவு நீர் அருந்தாதது, துரித உணவுகள், முறையாக சாப்பிடாமல் இருப்பதால் பலருக்கும் அல்சர் பிரச்சனை உள்ளது.

இதன் வெளிப்பாடாக வாயிலும் புண்கள் உருவாகி சாப்பிட முடியாத நிலைக்கு தள்ளுகின்றன.

இதுதவிர நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள அதிக ரசாயன கலப்பும் புண்களை உருவாக்குகின்றன.

இதனை சரிசெய்ய அத்திக்காய் பச்சடி செய்து சாப்பிடலாம்.

பிஞ்சு அத்திக்காயை உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும், அத்திக்காய் வெந்தவுடன் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், சீரகம் சேர்த்து அரைத்த கலவையை அதில் சேர்க்கவும், இதனுடன் சிறிது தயிர் சேர்த்தால் அத்திக்காய் பச்சடி தயார்.

இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண், கன்னக்குழி புண்கள் சரியாகும்.

இதேபோன்று அத்திக்காய் இலைகளை தேநீராக்கி வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள கிருமிகள் வெளியேறி பற்கள் பலமாகும், அத்துடன் மலச்சிக்கலையும் சரிசெய்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்