தங்கம் கலந்து கோழிக்கறியை ருசிக்கும் மக்கள்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in உணவு
105Shares
105Shares
lankasrimarket.com

வாடிக்கையாளர்களை கவருவதற்கு மேற்கத்திய நாடுகளில் உள்ள உணவங்கள் பல்வேறு யுத்திகளை கையாளுவது வாடிக்கையான ஒன்று.

நியூயார்க் நகரில் உள்ள பார் ஒன்றில் வாடிக்கையாளர்களை ஈர்க்க சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். மேலும், தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தியதாகவும் பார் நிர்வாகம் கூறியுள்ளது.

வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுகிறது.

மேலும் கோழிக்கறியை வழக்கமாக நாம் அனைவரும் பொன்னிறமாக பொறித்து உண்ணுவோம். ஆனால் அந்த பாரில் கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, கோழியை தங்க உணவாக மாற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர்.

அந்த பாரில் பரிமாறப்படும் 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை 44.38 டொலர் ஆகும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்