சொந்த மண்ணில் பாரிஸை சூறையாடிய பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்று வெற்றி

Report Print Basu in கால்பந்து
0Shares
0Shares
Cineulagam.com

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணி வரலாற்று வெற்றிப்பெற்று காலிறுதியல் நுழைந்துள்ளது பார்சிலோனா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்ட்-16 சுற்றின் முதல் கட்ட சுற்றில் பிரான்சைச் சேரந்த பிஎஸ்ஜி எனப்படும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியுடன் மோதி ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா அணி 4-0 என படுதோல்வியடைந்தது.

இந்நிலையில், பார்சிலோனாவின் சொந்த மைதானத்தில் பிஎஸ்ஜியுடன் இரண்டாவது கட்ட சுற்றில் பார்சிலோனா மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பார்சிலோன வீரர் Luis Suárez 3வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார், இதனைதொடர்ந்து பார்சிலோனாவின் மற்றொரு வீரரான Kurzawa 40வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி 50வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்தார். இதனையடுத்து பிஎஸ்ஜி வீரர் கவானி 62 கோல் அடிக்க போட்டி 3-1 என்ற நிலையில் இருந்தது.

இதனையடுத்து பார்சிலோனா வீரர் நெய்மர் 88வது நிமிடத்திலும் ஒரு கோலும், 91வது நிமிடத்தில பெனால்டி மூலம் ஒரு கோலும் அடித்து மைதானத்தை அதிர வைத்தார்.

இந்நிலையில், மிக விறுவிறுப்பான இறுதி நிமிடங்களில் 95வது நிமிடத்தில் பார்சிலோன வீரர் Sergi Roberto கோல் அடிக்க மைதானம் கதிகலங்கியது.

முதல் கட்ட சுற்றில் 4-0 என தோல்வியை கண்ட பார்சிலோனா அணி இரண்டாவது கட்ட சுற்றில் 6-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி வரலாற்றை நிகழ்த்தியது.

இதன் மூலம் முதல் மற்றும் இரண்டாவது கட்ட கோல் எண்ணிக்கையின் படி 6-5 என்ற கோல் விகிதத்தில் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டத்திற்கு பார்சிலோனா தேர்வுபெற்றது.

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே 4-0 என்ற கோல்கணக்கில் தோல்விமுகத்தில் இருந்த ஒரு அணி, அதிலிருந்து மீண்டு 6-1-என வெற்றியை நிலைநாட்டி, அடுத்த சுற்றுக்குத் தேர்வுபெறுவது இதுவே முதன் முறையாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments