லா லிகா தொடரில் விளையாட நெய்மருக்கு அதிரடி தடை!

Report Print Basu in கால்பந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

பார்சிலோனா நட்சத்திரம் நெய்மருக்கு அடுத்த மூன்று லா லிகா போட்டிகளில் விளையாட அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பே நெய்மருக்கு மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.

advertisement

லா லிகா தொடரில் கடந்த 9ம் திகதி La Rosaledaவில் நடந்த போட்டியில் மலேகா அணியிடம் 2-0 என பார்சிலோனா படுதோல்வியடைந்தது.

இந்த போட்டியின் போது பார்சிலோனா நட்சத்திர வீரர் நெய்மர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.,

இதற்கு ஒரு போட்டியில் மட்டுமே தடை விதிக்கப்பட வேண்டிய நிலையில், சிவப்பு அட்டை காண்பித்த நடுவரை நெய்மர் ஏளனமாய் பாராட்டியதால் அவருக்கு கூடுதலாக இரண்டு போட்டிகளிலும் தடை விதிப்பதாக ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான கிளாஸிகோவில் பார்சிலோனா தரப்பில் நெய்மர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments