இரட்டை சாதனையை படைக்கவுள்ள U-17 உலகக் கிண்ணப் போட்டிகள்

Report Print Fathima Fathima in கால்பந்து
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் நடைபெற்று வரும் U- 17 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இரட்டை சாதனையை படைக்கவுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

கொல்கத்தாவில் இன்று இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகள் மோதும் நிலையில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிரேசில்- மாலி அணிகள் மோதுகின்றன.

பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் கோல்களின் எண்ணிக்கையில் U- 17 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இரட்டை சாதனையை படைக்கவுள்ளது.

இதுவரையிலும் நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 12, 24,027 பேர் ஆகும், இதற்கு முன்பாக 1985ம் ஆண்டு சீனாவில் நடந்த போட்டிகளை 12,30,976 பேர் பார்த்தது மட்டுமே சாதனையாக இருந்தது.

இதேபோன்று கோல்களின் எண்ணிக்கை 170 ஆகும், இதற்கு முன்பாக 2013ம் ஆண்டு ஐக்கிய அரபு எமீரகத்தில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இரு சாதனைகளும் முறியடிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்