சாதித்தது பார்சிலோனா; லா லிகா பட்டத்தை நழுவ விட்டது ரியல் மாட்ரிட்!

Report Print Samaran Samaran in கால்பந்து
102Shares
102Shares
lankasrimarket.com

லா லிகா தொடரில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியான எல் கிளாசிகோ போட்டி சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. பல எதிர்பார்ப்புக்கள் போட்டிகள் சர்ச்சைகள் சண்டைகள் என்பவற்றுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது.

சொந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் போட்டியை ஆரம்பித்த ரியல் மாட்ரிட் ஆரம்பம் முதல் போட்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆட்டம் தொடங்கி 2 ஆவது நிமிடத்திலேயே ரொனால்டோ பந்தை கோல் கம்பத்தினுள் அடித்தாலும் அது ஆப் சைடு என நடுவரால் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய ரியல் மாட்ரிட் பார்சிலோனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. பார்சிலோனா வீரர்களும் தமது பங்கிற்கு சற்று ஆதிக்கத்தை வெளிப்படுத்தினாலும் முதல் பாதி ரியல் மாட்ரிட் ஆதிக்கத்துடன் 0-0 என நிறைவடைந்தது.

இத்தொடரின் மற்றைய போட்டிகளை போலவே இரண்டாம் பாதியை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டுவந்தது பார்சிலோனா. அடுத்தடுத்து ரியல் மாட்ரிட்ஐ அச்சுறுத்திய பார்சிலோனா 54 ஆவது நிமிடத்தில் கூட்டு முயற்சியில் சுவாரேஸ் மூலம் முதல் கோலை பெற்று முன்னிலை பெற்றது. தொடர்ந்து அச்சுறுத்திய பார்சிலோனா 63 ஆவது நிமிடத்தில் சிறப்பான ஒரு கோல் முயற்சியை மேற்கொள்ளும்போது பந்தை கையால் தடித்தமைக்காக ரியல் மாட்ரிட் பின்கள வீரர் கர்வஜால் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார்.

இதன் மூலம் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோல் ஆக்கினார். தொடர்ந்து 10 வீரர்களுடன் விளையாடிய ரியல் மாட்ரிட்ஐ பார்சிலோனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ரியல் மாட்ரிட் இன் கோல் முயற்சிகள் யாவும் பார்சிலோனாவால் முடக்கப்பட்டன. அத்துடன் போட்டி முடியும் தறுவாயில் விடல் ஒரு கோல் அடித்து அசத்த இறுதியில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் ஐ தனது சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தியது.

கடந்த 3 வருடங்களாக லா லிகா தொடரில் பெர்னாபேயு இல் ரியல் மாட்ரிட் இன் சொந்த மைதானத்தில் நடைபெற்ற எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

லா லிகா படத்துக்கான ஓட்டத்தில் இப்போட்டிக்கு முன் வரை 11 புள்ளிகள் பார்சிலோனாவை விட பின் தங்கியிருந்த ரியல் மாட்ரிட் இப்போட்டியில் தோற்றதன் மூலம் 14 புள்ளிகள் பின்தங்கி லா லிகா பட்டத்தை கிட்டத்தட்ட நழுவவிட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்