ஜாம்பவான் மெஸ்சியின் சாதனையை சமன் செய்த இந்திய வீரர்

Report Print Kabilan in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

Inter-continental கால்பந்து கிண்ணப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், மெஸ்சியின் சாதனையை இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார்.

கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின.

இந்த அணிகளில் இந்தியா மற்றும் சீனா தைபே அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்த போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் கென்யாவை வீழ்த்தி, கிண்ணத்தை வென்றது.

இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அத்துடன் சர்வதேச அளவில் அவரது கோல்களில் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

PTI

இதன்மூலம், அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்சியின் 64 கோல்கள் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். எனினும், மெஸ்சி 124 ஆட்டங்களில் இந்த சாதனையை செய்துள்ள நிலையில், சுனில் சேத்ரி 101 ஆட்டங்களிலேயே இதனை செய்துள்ளார்.

AP

போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 150 ஆட்டங்களில் விளையாடி 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்