ரசிகர்களுடன் அந்த உறவு வேண்டாம்: ரஷ்ய பெண்களுக்கு எச்சரிக்கை

Report Print Fathima Fathima in கால்பந்து
796Shares
796Shares
lankasrimarket.com

ரஷ்யாவுக்கு வரும் ரசிகர்களுடன் பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என பெண் எம்பி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் களைகட்டியுள்ளன, கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஷ்யாவை நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு வரும் ரசிகர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என ரஷ்ய கீழவை பெண் எம்பி-யும், கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்டன்யாவா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி முடிந்த பின்னர் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, லத்வியா இன கலப்பில் ஏராளமான குழந்தைகள் பிறந்தது.

இவர்களை பெரும்பாலான தாய்மார்கள் கைவிட்டதால் பாதிப்புக்குள்ளாகினர், சிங்கிள் மதர்கள் உருவாகிறார்கள்.

கலப்பின குழந்தைள் வேண்டாம், ரஷ்ய இன குழந்தைகள் பிறப்பதே நல்லது, எனவே ரஷ்யாவுக்கு வரும் ரசிகர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்