சந்தோஷத்தை கொண்டாடிய குரேஷியா ஜனாதிபதி: முகத்தை திருப்பிய ரஷ்ய பிரதமர்! வைரல் வீடியோ

Report Print Fathima Fathima in கால்பந்து
566Shares
566Shares
lankasrimarket.com

உலகக் கிண்ணப் போட்டியில் ரஷ்யாவை தோற்கடித்து குரேஷியா அணி அரையிறுதிக்கு முன்னேறியதை அந்நாட்டு ஜனாதிபதி கோலிண்டா கிராபார் கிடரோவிக் கொண்டாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவும், குரேஷியாவும் மோதிய காலிறுதி போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

அந்நாட்டு ஜனாதிபதி கோலிண்டா கிராபார் கிடரோவிக், ரஷ்ய பிரதமர் டிமித்ரி மேட்வடேவ்வும் வந்திருந்தனர்.

இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தன, ஒவ்வொரு கோலின் போதும் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், பெனால்டி ஷீட் வாய்ப்பில் குரேஷியா வெற்றி பெற்றது.

அப்போது கைதட்டி சந்தோஷத்தில் குரேஷியா ஜனாதிபதி கொண்டாட, ரஷ்ய பிரதமரின் முகமோ இறுகிப் போனது.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது, இதுதவிர வீரர்களின் அறைக்கு சென்ற ஜனாதிபதி வெற்றியை கொண்டாடியுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்