யாராவது உதவி செய்ய முடியுமா? உலகக்கிண்ணப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வீரர் கோரிக்கை

Report Print Santhan in கால்பந்து
1017Shares
1017Shares
lankasrimarket.com

தாய்லாந்து நாட்டில் குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு தன்னுடைய ஜெர்சி வழங்க வேண்டும் என்பதால், யாராவது உதவி செய்யும் படி இங்கிலாந்து அணி வீரர் வால்கர் கூறியுள்ளார்.

வடக்கு தாய்லாந்தில் இருக்கும் சியாங்க் மாகாணத்தில் 7 கி.மீற்றர் நீளமான குகையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக 12 மாணவர்கள் சிக்கினர்.

தொடர் மழைக்காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதில் தாமதம் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன.

மீட்பு குழுவினரின் 18 நாட்கள் தொடர் போராட்டத்தின் பயனாக குகையில் தவித்த அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த செய்தி உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் விளையாடும் பல வீரர்களுக்கும் தெரிந்திருந்தது.

இதனால் பிரான்ஸ் அணி வீரர் போக்பா தங்களுடைய அணி அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதால், அந்த வெற்றியை தாய்லாந்து நாட்டில் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு அர்பணிக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது இங்கிலாந்து அணி வீரர் வால்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தாய்லாந்தில் சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி, நான் அவர்களுக்கு எனது ஜெர்சியை அனுப்ப விரும்புகிறேன். அங்கே, யாராவது எனக்கு அவர்களுடைய முகவரியை அனுப்பு உதவி செய்ய முடியுமா? என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்