66 பயணிகளுடன் கடலில் விழுந்த எகிப்திய விமானம்: தீவிரவாதிகளின் சதிவேலையா?

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
66 பயணிகளுடன் கடலில் விழுந்த எகிப்திய விமானம்: தீவிரவாதிகளின் சதிவேலையா?
0Shares
0Shares
lankasrimarket.com

பாரீஸ் நகரில் இருந்து கெய்ரோவுக்குபுறப்பட்டு சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

விமான விபத்து

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இருந்து எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு (18 ஆம் திகதி) உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணிக்கு ஈஜிப்ட் ஏர் விமானம் (ஏர் பஸ் ஏ320 ரகம்) புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் 56 பயணிகள், 7 சிப்பந்திகள், 3 பாதுகாவலர்கள் என 66 பேர் பயணம் செய்தனர்.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் எகிப்து வான்பிரதேசத்தில் விமானம் நுழைந்து, 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது (அதிகாலை 2.45 மணிக்கு) திடீரென ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது.

பயணிகள் எந்த நாட்டினர்?

விபத்துக்குள்ளான விமானத்தில் 30 பேர் எகிப்து நாட்டினர், 15 பேர் பிரான்ஸ் நாட்டினர், இங்கிலாந்து, பெல்ஜியம், ஈராக், குவைத், சவுதி அரேபியா சாட், போர்ச்சுக்கல், அல்ஜீரியா, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் பயணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி 2 கைக்குழந்தைகளும், ஒரு குழந்தையும் பயணம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதா?

எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தேடல் படலம்

விபத்து நடந்த இடத்துக்கு எகிப்து ராணுவத்தின் தேடுதல் பிரிவினரும், மீட்பு படையினரும் விரைந்து, விமானத்தின் சிதைவுகளை தேடி வருகின்றனர்.

கிரீஸ் நாட்டுடன் இணைந்து எகிப்து ராணுவம் தேடுதல் பணியில் விமானங்களை ஈடுபடுத்தி உள்ளது. கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆலோசனை கூட்டம்

விமான விபத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அவர் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

இதற்கிடையில், கராற்றெ தீவுகளுக்குஅருகில் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்த பாகங்கள் எகிப்து ஏர் விமானத்தின் பாகங்கள் தான் என்றும் எகிப்து பாதுகாப்புதுறை மந்திரி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த பாகங்கள், தற்போது விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களுடையதுதானா என உறுதிசெய்யப்படவில்லை.

தீவிரவாத சதியா?

விமானம் ரேடார் பார்வையிலிருந்து காணாமல் போயிருப்பது தொழில்நுட்ப கோளாறு என்பதை விட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று எகிப்திய விமானப் போக்குவரத்து மந்திரி செரிப் பாத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments