பிரான்ஸ் நாட்டுக்கு பேராபத்து! என்ன செய்ய போகிறது அரசு?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் நாட்டில் தற்போது ஒரு மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவிவருவதால் அங்கு வாழும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

H3N2 வகையறா வைரஸ் ஆன epidemic ஆல் ஏற்படும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

advertisement

600க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் தினமும் தங்களுக்கு அந்த காய்ச்சல் வைரஸ் ஏற்ப்பட்டுள்ளதா என உடல் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இதனிடையில் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் Marisol Touraine இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடும் என்பதால் மருத்துவமனைகள் அதிக படுக்கைகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், இந்த காய்ச்சலானது மிகவும் ஆபத்தானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்களை இந்த வைரஸ் காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும்.

இந்த காய்ச்சல் ஒருவருக்கு தீவிரமடைந்தால் அவரின் இதயம் மற்றும் சுவாசகுழாய்களில் பிரச்சனை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் இந்த நோயின் வீரியம் அதிகளவில் பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், பொது இடங்களுக்கு போவதை முடிந்தளவு தடுக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும் போன்ற விடயங்களை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments