பிரான்ஸ் நாட்டுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை! என்ன செய்யபோகிறது அரசு?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com
advertisement

மாசு புகை சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரான்ஸ் நாட்டுக்கு ஐரோப்பிய யூனியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குளிர்காலம் காரணமாக சாலையெங்கிலும் கடும் பனி நிலவுகிறது.

advertisement

இதனுடன் கார் போன்ற வாகனங்களால் ஏற்படும் மாசு, புகைகளும் சேர்ந்து மக்களின் ஆரோக்கியத்துக்கு கேடுகள் விளைவிக்கின்றன.

இந்த பிரச்சனை ஜேர்மனி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அதிகளவில் உள்ளது.

கடந்த 2013ல் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 70000 பேர் மாசு காற்றால் வரும் நைட்ரஜன் ஆக்சைடு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியன் கமிஷன் பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இதை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் இது தான் கடைசி எச்சரிக்கை எனவும் கூறியுள்ளது.

பிரான்ஸில் அதிலும் முக்கியமாக பாரீஸில் கனரக வாகனங்கள் சாலையில் செல்ல தடை செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

அதே போல அரசு, மக்கள் பொது வாகனத்தில் இலவச பயணம் செய்யும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments