பிரான்ஸ் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: சிசிடிவியில் வெளியான அதிர்ச்சி காட்சி

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த காவலர்கள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் உள்ள Orly விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் சாதாரணமாக வந்து அங்கிருந்த பெண் காவலரின் கையில் இருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்தார்.

advertisement

இதைக் கண்ட சக காவலர்கள் இருவர் அவரை சுட்டுத்தள்ளி அந்த பெண் காவலர் மற்றும் பயணிகளை காப்பாற்றினர். Orly விமானநிலையம் பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விமானநிலையம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் பெயர் Ben Belgacem (39) என்று தெரியவந்தது. அதன் பின் அவரின் தந்தை மற்றும் சகோதரர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானநிலையத்தில் Ben Belgacem நுழைந்து என்ன செய்தார் என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் சாதாரணமாக வரும் Belgacem பெண் காவலரின் அருகில் சென்று, திடீரென்று அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிப்பதற்கு சண்டை போடுகிறார். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர்.

அதன் பின் இரண்டு காவலர்கள் Belgacem-ஐ பின் தொடர்ந்த படியே செல்கின்றனர். ஒரு கட்டத்தில் காவலர்கள் அவரை சுட்டுவிடுகின்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலே இறக்கிறார். இந்த சம்பவம் சுமார் 3 நிமிடங்கள் சென்றுள்ளது.

Belgacem மீது பல கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த நவம்பர் மாதம் தான் Belgacem சிறையில் இருந்து வெளிவந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments