பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்! பொலிசார் படுகொலை

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்ப்ஸ் எலிஸில் பகுதியிலே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் பொலிசாரை நோக்கி சரமாரியாக சுட்டதில் பொலிசார் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மற்றொருவரும் உயிரிழந்ததாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். எனினும், சாம்ப்ஸ் எலிஸில் பகுதியை பொலிசார் தங்களது காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

ஞாயிறன்று ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெறவுள்ள நிலையில் பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments