மர்ம பொருளால் பீதி: பாரீசின் Charles de Gaulle விமான நிலையம் மூடல்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பாரீஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்தின் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அறையின் அருகில் சந்தேகத்துக்குரிய பொருள் இருந்ததால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் புகழ்பெற்ற Charles de Gaulle விமான நிலையம் அமைந்துள்ளது.

இங்குள்ள பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அறையின் அருகில் சந்தேகப்படும்படியான மர்ம சூட்கேஸ் சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து Charles de Gaulle விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது.

இங்கு தற்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்த பயணி ஒருவர், மக்கள் கூட்டமாக அங்கிருந்து வெளியேறும் புகைப்படத்தை எடுத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

மேலும், விமான நிலையத்தில் யாரோ பலமாக கத்துவது போன்ற குரல் கேட்டதாக கூறப்பட்டது.

அதற்கு விளக்கமளித்துள்ள அதிகாரிகள், வேண்டுமென்றே யாரோ கத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments