தீவிரவாதத்தை தடுக்க பிரான்சின் புதிய திட்டம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

லண்டனில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் புதிய திட்டமொன்றை செயல்படுத்த உள்ளார்.

இந்த திட்டத்தில் புதிய பொலிஸ் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளது.

advertisement

இந்த குழுவில் முதற்கட்டமாக 50 முதல் 100 வரையிலான அதிகாரிகள் இணைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் 24 மணிநேரமும் பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

விரைவில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும், தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் பிரான்ஸ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவித்துள்ளார்.

மேலும் ஏழு பேரில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments