International
Notification
Notification
Submit Cancel

பிரான்சில் நடந்த தாக்குதல்: இது சிரியாவிற்காக என கத்திய படி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி?

Topics :
advertisement

பாரிசில் தீவிரவாதி என்று கருதப்படும் மர்ம நபர் நடத்திய திடீர் தாக்குலில் இரண்டு பொலிசார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Notre Dame பகுதியின் தேவாலயத்தின் அருகே பொலிசார் காவலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் கையில் சுத்தியல் மற்றும் கத்தியை வைத்து, அங்கிருந்த பொலிசார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

இச்சம்பவத்தால் இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலி ஈடுபட்ட தீவிரவாதியை பொலிசார் சம்பவ இடத்திலே சுட்டுக் கொன்று விட்டனர்.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் ஒரு அல்ஜிரியன் மாணவன் என்றும் தாக்குதலில் ஈடுபட்ட போது, இது சிரியாவிற்காக என்று கத்திய படி தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலுக்கு கலீபாவின் போராளி என்று கூறப்படும் இஸ்லாமிய தேசப் பயங்கரவாதிகளான தயேஸ் உரிமை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவன் குறித்த பெயர்கள் போன்றவைகள் தொடர்பான தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement