பிரித்தானியாவுக்காக கதவுகள் திறந்தே இருக்கும்: பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பிய யூனியனில் பிரித்தானியா நீடிப்பதற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் கடந்த ஆண்டு வாக்களித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் Brexit விடயத்தில் பேச்சுவார்த்தை இன்னும் முடியாததால் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.

Brexitக்கான செயல்முறை தொடங்கிவிட்டால் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய யூனியனில் இடம் பெறுவது என்பது கடினமான விடயமாக மாறிவிடும் என மேக்ரான் கூறியுள்ளார்.

Brexit குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடங்கும் என பிரித்தானிய பிரதமர் தெரசா மே கூறியுள்ள நிலையில் மேக்ரான் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானியா மக்களிடம் ஒரு நோக்கத்திற்காக ஒற்றுமை உள்ளதாகவும், அது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகும் விடயத்தில் வெற்றியடைவது தான் எனவும் தெரேசா மே கூறியிருந்தார்.

சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தெரேசா மே சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெரேசா மே Brexit விடயத்தில் தனது கடுமையான நடவடிக்கையை கைவிடுவார் என அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments