ரயில்வே டிராக்கில் மனைவியை கட்டிப் போட்ட கணவன்: நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் மனைவியை ரயில்வே டிராக்கில் கட்டிப் போட்டு விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ம் திகதி பிரான்சின் Paris மற்றும் Nantes-க்கு இடைப்பட்ட Beauvilliers நகரிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதனால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட தகவலின் படி, தற்கொலை செய்து கொண்ட நபர் மூன்று வருடங்களாக வேலை இல்லாமல் இருந்ததும், குறித்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் மன அழுத்தம் அதிகமானதால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த நபர், மனைவியை ரயில்வே டிராக்கில் கட்டிப் போட்டுள்ளார்.

பின்னர் ரயில் வந்ததும் தானும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த பெண் சுயநினைவில் தான் இருந்தாரா? அல்லது போதை மருந்து எடுத்துக் கொண்டாரா? என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பிரான்சில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments