பேச்சு வார்த்தையை துவங்கும் பிரித்தானியா: முக்கிய தலைவர்களை சந்தித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான், ஐரோப்பாவின் முக்கியத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் சமீபத்தில் தான் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தெரசா மே தலைமையிலான கன்சர்வெடிவ் கட்சி பெரும்பான்மையான இடத்தை கைப்பற்றாமல் விட்டாமலும்,டேமாக்ரடிக் கட்சியுடன் இணைந்து அவர் அமைக்கிறார்.

இதனால் ஐரோப்பிய யூனியலிருந்து பிரித்தானிய வெளியேறுவதில் தெரசா மே உறுதியாக இருப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

அதற்கான பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள சமயத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஐரோப்பாவின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது டட்சு, எஸ்டோன்சியா மற்றும் ஸ்பெயின் நாட்டுத் அரசியல் தலைவர்கள் என பலர் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின் போது, ஐரோப்பா குறித்து அவரின் அஜெண்டா, இராணுவ மற்றும் பாதுகாப்பு குறித்து அவரின் நிலைப்பாடு, பருவ நிலை மாற்றம் குறித்து சர்வதேச சூழலில் நிகழ்ந்து மாற்றங்கள் மற்றும் அகதிகள் போன்ற முக்கிய விஷங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments