பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று, ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்ததையொட்டி கடந்த 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 577 ஆகும்.
இந்த நிலையில் 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தலில், பெரும்பான்மையான இடங்களில் அதிபர் மெக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இன்று நடைபெறும் தேர்தலிலும் மெக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி இன்னும் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
எனவே மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 390-ல் இருந்து 430 இடங்கள் வரை அதிபர் மெக்ரான் கட்சி கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதால் வாக்கெடுப்புகள் நடைபெறும் போது அதிபருக்கு சாதகமான முடிவுகள் எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.