பாராளுமன்ற தேர்தல்: பெரும்பான்மை இடத்தை பிடித்த ஜனாதிபதி மேக்ரான் கட்சி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததையொட்டி கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 577 ஆகும். முதல் சுற்று தேர்தலில், பெரும்பான்மையான இடங்களில் ஜனாதிபதி மேக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், ஜனாதிபதி மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 355 இடங்களை கைப்பற்றியது. பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதியின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த புதிய பொருளாதார திட்டங்கள், பிரிட்டனுடனான உறவு குறித்த கொள்கைகள் பாராளுமன்றத்தில் பெரிய எதிர்ப்பின்றி நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments