International
Notification
Notification
Submit Cancel

காளையை அடக்கும் விழாவில் நிகழ்ந்த விபரீதம்: பிரபல வீரர் மரணம்

Topics :
advertisement

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Aire-sur-l'Adour என்ற இடத்தில் நேற்று முன் தினம் காளையை அடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல வீரரான Ivan Fandino(36) என்பவரும் பங்கேற்றுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பல விருதுகளையும் பெற்று பிரபலமானவர்.

இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் காளையிடம் சண்டையிட நபர் தயாராகியுள்ளார்.

அப்போது, துரதிஷ்டவசமாக நபர் அணிந்திருந்த உடை அவரது கால்களை சுற்றியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவரை காளை தனது கூர்மையான கொம்புகளால் குத்தியுள்ளது.

ஆழமான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் பரிதாபமாக பலியானார்.

மருத்துவர்கள் வெளியிட்ட தகவலில் காளையின் கொம்பு அவரது நுரையீரலை சேதப்படுத்தி விட்டதாகவும், ஆம்புலன்ஸில் கொண்டு வரும்போது அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement