ஆயுதங்களுடன் பொலிஸ் வாகனம் மீது மோதிய நபர்: பிரான்சில் எச்சரிக்கைநிலை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வேன் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள Champs-Elysees பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன் மீது மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்.

இதையடுத்து, மர்மநபர் வந்த காரில் இருந்து நெருப்பு மற்றும் புகை கிளம்பியது. சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த இடத்தை முற்றுகையிட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.

காரை ஓட்டி வந்த மர்ம நபர் இறந்த நிலையில் காரில் கிடந்துள்ளார். மேலும், அவரது காரில் ரைபில், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள நகர பொலிசார், காரை ஓட்டி வந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலையடுத்து, பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிப்படையான இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாரிஸில் பிரபல வீதியான சேம்ப்ஸ் எலிசீஸ்-ஐ அந்நாட்டு காவல்துறையினர் மூடியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று நடைபெறுவதற்கு முன்னர் இதே பகுதியில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments