மேக்ரானின் அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்சின் தேசிய தினமான ஜீலை 14ம் திகதி நடைபெறும் நிகழ்வில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சின் ஜீலை 14ம் திகதி நடைபெறவுள்ள Bastille Day நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தனது மனைவி மெலேனியா டிரம்புடன் கலந்து கொள்ள உள்ளார்.

நிகழ்வின் போது இராணுவ மற்றும் வான்படை அணிவகுப்பில், அமெரிக்க வான்படையின் F- 22, F-16, Thunderbirds போர் விமானங்கள் கலந்து கொள்ளவுள்ளது.

அதுமட்டுமின்றி முதல் உலகப்போரின் போது பிரான்ஸ் ராணுவத்துடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றிய நிலையில், நூற்றாண்டுகள் நிறைவடைய உள்ளதையும் பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments