பிரான்சில் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: டிரைவர் கைது

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்சில் கார் மூலம் மோதி மசூதியை தகர்க்க முயற்சி செய்த டிரைவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரிசின் தென்கிழக்கு புறநகரில் உள்ள கிரீடியர் நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்நகரில் உள்ள மசூதிக்கு நேற்றிரவு வேகமாக வந்த கார் ஒன்று, மசூதியின் தூண் மற்றும் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை, உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் குற்றவாளியை கைது செய்தனர்.

43 வயது மதிக்கத்தக்க நபர் அர்மீனியாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க எண்ணியே இச்செயலை செய்ததாக லே பாரிஸ்யன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments