ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட சரக்கு கப்பல்கள்: உயிர் தப்பிய ஊழியர்கள்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆங்கில கால்வாயில் இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில், அதிலிருந்த ஊழியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவையும், பிரான்சையும் இணைக்கும் முக்கிய கால்வாயாக ஆங்கில கால்வாய் உள்ளது.

இக்கால்வாய் வழியே சீபிரெண்டியர் எண்ணெய் கப்பல், 38 ஆயிரம் டன் பெட்ரோலுடன் கவுதமாலாவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதே பாதை வழியாக மற்றொரு சரக்கு கப்பலான ஹூவாயன் எண்டீவர் சென்று கொண்டிருந்தது.

அப்போது டோவர் துறைமுகம் அருகே வந்த போது இரண்டு சரக்கு கப்பல்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இந்த படகு விபத்தால் கப்பல்களுக்கு மட்டும் சேதமடைந்துள்ளதாகவும், அதில் இருந்த ஊழியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கப்பல்கள் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து பிரித்தானியா கடலோர காவல் படையினர் அங்கு ஹெலிகாபடர் மற்றும் படகுகள் அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு கப்பல்களுக்கும் நடுவில் நங்குரம் மூலம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீபிரண்டியர் கப்பலை இழுப்பதற்காக பிரான்சில் இருந்து இழுவை கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments