பிரான்ஸ் மசூதி அருகில் இரு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 8 பேர் காயம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸின் Avignon நகரில் உள்ள மசூதியிலிருந்து வெளியில் வந்த மக்கள் மீது இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரான்ஸின் தென் கிழக்கு பகுதியில் உள்ள Avignon நகரில் ஒரு மசூதி அமைந்துள்ளது.

அங்கிருந்து மக்கள் நேற்றிரவு 10.30 மணிக்கு பிரார்த்தனைகளை முடித்து விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு காரில் வந்த இரண்டு முகமூடி அணிந்த மர்மநபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இரண்டு பேரில் ஒருவர் கைதுப்பாக்கியும், இன்னொருவன் வேறு ரக துப்பாக்கியும் வைத்திருந்ததாக தெரிகிறது.

துப்பாக்கி சூட்டில் மொத்தம் 8 பேர் காயமடைந்தார்கள். அருகிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு இதில் காயம் ஏற்பட்டது

காயம் ஏற்பட்டவர்களில் 7 வயது சிறுமியும் அடக்கமாகும்.

துப்பாக்கி சூட்டை நடத்திய பின்னர், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பிரான்ஸில் கடந்த சில வருடங்களாக தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு எப்போதும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments