பிரான்ஸ் ஜனாதிபதியை கொல்ல முயன்ற வாலிபர் அதிரடி கைது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வாலிபர் ஒருவர் அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த தூண்டுதலாக இருந்த பிரான்ஸ் புரட்சி கடந்த 1789-ம் ஆண்டு யூலை 14-ம் திகதி நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸில் உள்ள Bastille சிறைச்சாலையில் முற்றுகை போராட்டம் நடத்தியதே பிரான்ஸ் புரட்சிக்கு வழிவகுத்தது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான யூலை 14-ம் திகதியை சிறப்பாக கொண்டாடும் அடிப்படையில் பாரீஸில் மிக பிரமாண்டமான ஊர்வல நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரனும் பங்கேற்கிறார்.

ஆனால், நிகழ்ச்சி நடைப்பெற உள்ள யூலை 14-ம் திகதி ஜனாதிபதியை கொலை செய்ய நபர் ஒருவர் சதி திட்டம் தீட்டி வருவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைக்கப்பட்டதும் 23 வயதான வாலிபர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரீஸிக்கு அருகில் உள்ள Argenteuil என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் தன்னை ஒரு ‘தீவிர தேசியவாதி’ என பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

வாலிபரின் வீட்டை சோதனை செய்தபோது அவரது வாகனத்தில் 3 கத்திகளும் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கு இணையத்தளம் மூலமாக உதவி பெற முயன்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிசார் நடத்திய விசாரணையில் ஜனாதிபதியை கொலை செய்து ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டியது உண்மை அந்த வாலிபர் பொலிசாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments