நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை: வருகிறது புதிய சட்டம்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் இயக்க நிரந்திர தடை விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரான்ஸ் நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுடன் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக பிரான்ஸ் திகழும் வகையில் புரட்சிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

இதன் ஒருப்பகுதியாக எதிர்வரும் 2050-ம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு சுகாதாரமான பிரான்ஸை உருவாக்கப்படும் என மேக்ரான் அறிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவிப்பை தொடர்ந்து புதிதாக சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுள்ள Nicolas Hulot என்பவர் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் 2040-ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாகனங்கள் வைத்துள்ள உரிமையாளர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கவும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments