பிரான்சில் இருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இடமாற்றம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முகாமிட்டிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளை பொலிசார் வெளியேற்றி வேறோரு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் வடக்கு பாரிசின் Porte de la Chapelle பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6-மணி அளவில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சுமார் 60-பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு பிரான்சில் இருக்கும் மற்ற அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இங்கிருந்த சுமார் 2500 அகதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான், அகதிகள் வெளியேற்றுவது தொடர்பாக 350 பொலிசார் மற்றும் 100 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முகாம்களில் சட்ட விரோதமாக சிலர் தங்கி வருவதாகவும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாகவே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் சூடான், எரித்திரியா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments