வெள்ளத்தில் தத்தளிக்கும் பாரிஸ்: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

இடி, மின்னலுடன் கூடிய கனமழையால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் நேற்றிரவு சுமார் இரண்டு மணிநேரம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பொழிந்தது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் 15 நிலையங்கள் மூடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது.

போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக பாரிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து பொழிந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது.

பிரான்ஸ் வானிலை மையத்தின் அறிக்கையின் படி, நேற்றிரவு ஒரு மணிநேரத்தில் சுமார் 50 மிமீ மழை பொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் கூடிய கனமழையால் பாரிஸ் வெள்ளத்தில் தத்தளிப்பதால் போக்குவரத்து முழுமையாக முடங்கி மக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments